Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > வயது ஒரு தடையல்ல

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #71  
Old 27th November 2016
whiteburst whiteburst is offline
 
Join Date: 21st September 2016
Posts: 403
Rep Power: 3 Points: 760
whiteburst has received several accoladeswhiteburst has received several accoladeswhiteburst has received several accolades
ஃபிளாஸ்பேக் முடிந்தது! நிகழ் காலம்!

இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் சற்றே நீங்கிய நிம்மதியில், அவள் எப்போதும் எதிர்பார்க்கும் என் பாசம், புதிதாக கிடைத்த சந்தோஷத்தில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்! என் தோளில் சாய்ந்து கொண்டே!

6.

அவள் இன்னும் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க, என் மனதுள் குற்ற உணர்ச்சி பெருகியது. ஆரம்பத்திலிருந்து, அவள் என்னிடம் அன்பாகத்தான் இருக்கிறாள். நான் திருப்பி எந்த விதமான உணர்வையும் காட்டாவிட்டாலும், என் மேல் அவளுக்கிருந்த பாசம் அப்படியே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் கூடப் பிறந்தவள் கூட இல்லை!

இவளுக்கென்ன தலையெழுத்து? தாத்தாவே இவள் பங்கிற்கு கொஞ்சம் சொத்து எழுதி வைக்கிறேன் என்று சொன்னதற்கு வலுக்கட்டாயமாய் மறுத்தவள், இன்று தனக்கு யாரும் இல்லை என்று தற்கொலை வரை போயிருக்கிறாள். அப்படி, இவளிடம் கூட அன்பைக் காட்டாமல், என்ன ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் நான்???

எந்த சம்பந்தமும் இல்லாமல், என் மேல் உருகி உருகி அன்பினைக் கொட்டும், இவளிடம் கூடத் திருப்பி அன்பினைக் காமிக்காமல், என் அம்மாவையும், அப்பாவையும் குறை சொல்ல என்னத் தகுதி இருக்கிறது?

எதற்க்கு அப்படி வாழனும்? அப்படி வாழ்ந்து என்ன சாதித்து விடப்போகிறேன். நான், என்னை மாற்றிக் கொண்டேயாக வேண்டும் என்கிற எண்ணம், என் மனதில் வலுப் பெற்றது.

மெல்ல வாய் விட்டுச் சொன்னேன். சாரி!

திட்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். அதான் ஏற்கனவே சொல்லிட்டியே, இப்ப எதுக்கு சொல்ற?

அப்ப சொன்னது, நான் உன்கிட்ட பேசுன முறைக்கு. இப்ப சொல்றது, நீ எவ்ளோ என் மேல பாசமா நடந்துகிட்டாலும், உன்னை புரிஞ்சிக்காம இருந்ததுக்கு.

எனக்கு, அம்மா போனதுக்கப்புறம், யார் மேலயும் நம்பிக்கையே வரலை. ஒரு மாதிரி, மனசு கல்லா மாறிடுச்சி. அப்படியே, என்னைச் சுத்தி, நானே ஒரு வேலி போட்டுகிட்டேன்.

தாத்தாவோட இறப்புல நீ ஃபீல் பண்ணது, என்கிட்ட பேசுனது எல்லாமே, நீயும் பாசத்துக்காக எவ்ளோ ஏங்குற, எனக்காக எவ்ளோ யோசிக்கிற எல்லாமே தெரியும். ஆனா, அப்ப உனக்கு ஆறுதலா இருந்திருந்தா, நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருப்பியா, சொல்லியிருந்தாலும், அங்க போயும் என்னைப் பத்தி, நான் தனியா இருக்கேனேன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பன்னு எனக்கு தோணுச்சு, அதான், அப்பவும் சரி, கல்யாணத்துலியும் சரி, உன்னை விட்டு தள்ளியே நின்னேன். குறைந்த பட்சம், நீ உனக்கு கிடைச்சிருக்கிர புது குடும்பத்தோட சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, அது உனக்கு இப்படி ஒரு சிக்கலை கொண்டு வரும்னு நினைக்கலை.
இப்படியே தள்ளி நின்னதாலத்தான் உன்கிட்டயோ, உன் ஃபிரண்டு லாவண்யாகிட்டயோ கூட பெருசா உணர்ச்சியை காமிச்சுகிட்டதில்லை.ப்ச்

பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டேன். இனி உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்லாத. யாரிருந்தாலும், இல்லாட்டியும் நான் இருப்பேன் உனக்கு!

அதான் சொல்றேன், சாரி! என்று தலை குனிந்தேன்

அவள் உணர்ச்சிவயப்பட்டிருந்தாள் என்பதை கலங்கிய கண்களே சொல்லியது. வேகமாக என்னை இழுத்து அவள் மார்போடு அணைத்துக் கொண்டாள். என் முடியை கோதிக் கொடுத்தாள்.



இப்பொழுதும் என்னைத்தான் அவள் ஆறுதல் படுத்துகிறாள்!

அப்படியே கொஞ்ச நேரம் இருந்தோம். மனதுக்கு நெருக்கமான சில பெண்களிடம் இருந்து மட்டுமே வரும் ஒரு பிரத்யோக வாசனை, அவள் உடலில் இருந்து வந்தது. இது நாள் வரை இதனை நான் கவனித்திருக்க வில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. இது கண்டிப்பாக காமத்தின் வாசனை இல்லை. அன்பின் வாசனை. அதில் கொஞ்சம் தாய்மையின் வாசமும் இருந்தது.

காதலியின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும், அன்னையின் உடலில் இருந்து வரும் வாசத்திற்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்கள், இதை உணர்வார்கள்! நான் மெல்ல அவளை விட்டு பிரிந்தேன்.

அது மட்டுமில்லை, உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்துன, அந்த ரெண்டு பேரையும் நான் சும்மா விடப் போறதில்லை.

அப்பொழுதுதான் அவளுக்கு அவர்களைப் பற்றிய ஞாபகம் வந்தது. நான் இருக்கிறேன் என்ற தைரியம், அவளுக்கும் தெம்பினைத் தந்தது.

என்னடா பண்ணப் போற? நீ தனியா என்ன பண்ணுவ?

அவள் இன்னும் என்னை அதே சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலும்.

ஹா ஹா, நான் தனியாவாவா? நீ என்ன நினைச்சிட்டிருக்க என்னப் பத்தி? நான் சொசைட்டில எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா??? பிசினஸ்ல, என்னைப் பாத்து அவனவன் பயப்படுவான். உன் மாமானார்லாம் எனக்கு சுண்டைக்கா! அவனை அழிக்கறதுக்கு எனக்கு அரை மணி நேரம் போதும். ஆனா, அவனையெல்லாம் அவ்ளோ சுலபமா அடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமா அடிக்கனும். அவன் உன் கால்ல விழுந்து கெஞ்சனும். அப்படி ஒரு அடியா இருக்கனும்.

அப்படி என்னடா பண்ணப் போற?

தெரியலை, இனிமேதான் யோசிக்கனும். அது என்னான்னு யோசிச்சிட்டு சொல்றேன்.

இப்ப நீ எதைப் பத்தியும் போட்டு குழப்பிக்காம நல்லா ரெஸ்ட் எடு! முடிஞ்சா, அவங்களை என்னா பண்றதுன்னு யோசி. ஓகே?

அடுத்த நாள் காலை!

சாப்பிடும் போது கேட்டாள், ஏதாவது யோசிச்சியா?

இன்னும் இல்லை. நேத்து நைட்டுதானே பேசுனோம். அதுக்குள்ள என்ன அவசரம்?

இல்ல, நான் ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லிட்டு வந்தேன். திரும்பி வரவா போறோம்னு நினைச்சு, ஆனா, இப்ப அவிங்க என்னை எதிர்பாப்பாங்க இல்ல? ஹரீஸ் இன்னிக்கு ஃபோன் பண்ணுவாரு! அவள் குரலில் கொஞ்சம் பயம் தென்பட்டது!

ஏய், நீ எவ்ளோ தைரியமான ஆளு? இதுக்கு ஏன் இப்புடி அப்செட் ஆகுற?

அவன் ரொம்ப வக்கிரம் புடிச்சவண்டா! அவன் வயசு என்ன, என் வயசு என்ன? என்ன உறவு? எப்புடி இப்புடில்லாம் பேச முடியுது?! அவன்கிட்ட என்னத்தை சண்டை போட முடியும்? தவிர, இதுக்கு என்ன பண்ணனுனும்னு தெரியாம, அங்க போகனும்னு நினைச்சாலே நடுங்குதுடா!

அவள் குரலே, அவன் எந்தளவு அவளை சித்ரவதை பண்ணியிருக்கான் என்று தெரிந்தது. அது என்னுள் இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது!

அவள் கையைப் பிடித்தேன். ஏதாவது காரணம் சொல்லி எப்புடியாவுது ஒரு வாரம் இருக்கப் பாரு! அதுக்குள்ள நான் வழி சொல்றேன். அவனை அடிக்கனும்னா, நிமிஷம் போதும், ஆனா, அவன் உனக்கு பண்ணதுக்கு, அவன் பொண்டாட்டி பண்ணதுக்கு ரெண்டு பேரும் அனுபவிக்கனும்! அப்படி ஒரு திட்டத்தோட வர்றேன்! ஓகே???

ம்ம்ம், ஓகே டா! இப்பதான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு!

எல்லாம் சரி, இப்புடியே எத்தனை நாள் இருக்கப் போற? எங்க போச்சு உன் கான்ஃபிடண்ட்லாம், வேலைக்குப் போறப்ப எப்புடி இருப்ப?

பேசிக்கலாவே, நீ இண்டலிஜெண்ட் ஆச்சே? ஏன் அங்கப் போனதுக்கப்புறம், வேலைக்குப் போறதில்லை? ஹரீஸ் கூட உன்னை, அவர் கம்பெனிக்கே வரச் சொன்னாருன்னு சொன்ன? ஏன் இப்பல்லாம் போறதில்லை?

ஹரீஸுக்கும், நான் படிச்சிச்சு வீட்டுல இருக்குறது புடிக்கலைதான்! ஆனா, ஆஃபிஸ்லியும் அந்தாளு இருக்கான்ல? அவன் அங்கேயும் அசிங்கமா பேசுனான், அதான் போறதில்லை!

நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத? ஹரீஸ் பத்தி நீ என்ன நினைக்குற? இவ்ளோ நடந்ததுக்கப்புறமும் நீ அவர் கூட அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்தினேன்.

அவள் மெதுவாகச் சொன்னாள்.

அவர் ரொம்ப நல்லவருடா! தாத்தா ஏன் அவரை கல்யாணம் பண்னனும்னு சொன்னாருன்னு, அவரோட கேரக்டரைப் பாத்தா புரியுது! எவ்ளோ காசு இருந்தும், கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது.

கண்மூடித்தனமான நம்பிக்கை, அதுவும் தகுதியில்லாதவிங்க மேல வெச்சிருக்காருங்கிறதைத் தாண்டி வேறெந்த பிரச்சினையும் இல்லை. அவிங்க சித்தப்பா பேச்சைக் கேட்டுத் திட்டுனா கூட, என்கிட்ட தனியா சாரி சொல்லுவாரு. சொன்னாலும், நீ எப்பிடி இப்படியெல்லாம் நடந்துக்குறன்னு என்கிட்டயே வருத்தப்படுவாரு!

நான் அவரு கம்பெனிக்கு வரலைன்னு சொன்னப்ப கூட, இதுக்கு எதுக்கு இஞ்சினியரிங் படிச்ச, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுனால, உன் திறமை அதிகமானா, இன்னும் வெளிய வந்தாதான் எனக்கு பெருமையே ஒழிய, இப்படி வீட்டோட இருக்கிறது எனக்கு அசிங்கம்னு ரொம்ப பேசுனாரு!

என்னை ரொம்ப விரும்புறாருடா. என்னைப் பத்தி தெரிஞ்சவுடனே, அவரு சொன்னது, உனக்கு நான் எல்லாவுமா இருப்பேன், இனிமே நீ ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு சொன்னாரு. உனக்காக நான் ஃபீல் பண்ணப்ப கூட, உனக்கும் நாம் சொந்தமா இருப்போம்னு உண்மையாச் சொன்னாருடா. என்னைத் திட்டுனா கூட, பாசத்தோட அருமை புரிஞ்ச நானே எப்படி இப்படி நடக்கலாம்னுதான் வருத்தப்படுவாரு! அவர் ரொம்ப நல்லவர். அதுதான் அவரோட மிகப் பெரிய ப்ளஸ். ஆனா அவர் சித்தப்பாவுக்கும் அது ப்ளஸ்ஸா போயிடுச்சி!

பேசிக்காவே அவரு பாசத்துக்காக ஏங்குறவருடா! ஒரு விதத்துல அவரும் நம்மளை மாதிரிதாண்டா! நமக்கு பெத்தவிங்க இருந்தும் இல்லாத மாதிரி. அவருக்கோ, உண்மையாவுமே இல்ல. நமக்குனாச்சும் தாத்தா இருந்தாங்க, ஆனா அவருக்கு? இவிங்க சித்தப்பா, சித்தி முதல்ல அவிங்க அப்பா, அம்மாவோட பணத்துக்காக வந்தாங்க. அப்புறம் போலியா நடிச்சு, அப்படியே இருந்துட்டாங்க!

அவர் கதையை என்கிட்ட சொல்லியிருக்காரு. ஆரம்பத்துல அதுல எனக்கு பெரிய தப்பு தெரியலை. ஆனா, அவிங்க சித்தப்பா, சித்தி சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம், எனக்கு அது வேற அர்த்தங்களைக் கொடுக்குது. அவங்க சித்தப்பா, அவரை பார்ட்டிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு, மறைமுகமா எல்லா வித கெட்ட பழக்கங்களுக்கும் பழக்க நினைச்சிருக்கார். ஆனா, இவரு எதுலியும் மாட்டிக்கலை. சுயமா, நல்ல பழக்க வழக்கங்களோட வளந்தாரு. அதையே, அவரு எங்க சித்தப்பா, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளத்தாரு, அவ்ளோ நம்பிக்கை என் மேலன்னு புரிஞ்சு வெஞ்சிருக்கார். மனுஷனுக்கு இவ்ளோ பாசிட்டிவான எண்ணம் இருக்கக்கூடாது.



கல்யாணம் ஆகி இந்தக் காலத்துல, அவரை நான் ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்! இப்பியும், இந்த உண்மைல்லாம் தெரிஞ்சுதுன்னா, அவர் தாங்க மாட்டாருடா!

கெட்டவனா இருந்தா, செஞ்ச தப்புக்கு ஃபீல் பண்ணத் தேவையில்லை! ஆனா, நல்லவனாச்சே, நம்மளையே நம்பி வந்தவளுக்கு இந்த நிலை வரக் காரணமாயிட்டோமே, அவ சொன்னதை கேக்கலியேங்கிற குற்ற உணர்ச்சிலியே செத்துடுவாரு! எனக்கு அதுதான் பயமா இருக்கு! எனக்கு அவர் கூட சந்தோஷமா வாழனும்டா! அவ்ளோ நல்லவருடா! அவள் கண்கள் கலங்கியிருந்தது.

அவள் பேசப் பேச, எனக்கு, அவள் ஹரீஸ் மேல் வைத்திருந்த காதலைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அதே சமயம், உறுதியும் பூண்டேன், அவள் வாழ்வில், மகிழ்ச்சியை கொண்டு வருவது என்று!

Reply With Quote
  #72  
Old 27th November 2016
jananibitch's Avatar
jananibitch jananibitch is offline
Custom title
 
Join Date: 19th March 2012
Location: in my dick
Posts: 1,091
Rep Power: 16 Points: 3246
jananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazijananibitch is hunted by the papparazi
the plot is getting more and more interesting

surely its not going to be just a revenge story

it has the features of another masterpiece from you
______________________________
Incest is Beautiful

Reply With Quote
  #73  
Old 27th November 2016
whiteburst whiteburst is offline
 
Join Date: 21st September 2016
Posts: 403
Rep Power: 3 Points: 760
whiteburst has received several accoladeswhiteburst has received several accoladeswhiteburst has received several accolades
அவள் பேசப் பேச, எனக்கு, அவள் ஹரீஸ் மேல் வைத்திருந்த காதலைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அதே சமயம், உறுதியும் பூண்டேன், அவள் வாழ்வில், மகிழ்ச்சியை கொண்டு வருவது என்று!

7.

நாளைக்கு என்ன வேலை உனக்கு? அடுத்த நாள் இரவு, சாப்பிடும் போது அவளிடம் கேட்டேன்!

ஒரு வேலையும் இல்லை! சொல்லு!

நாளைக்கு காலைல 8 மணிக்கு ரெடியா இரு. ஒரு இடத்துக்கு போகலாம்.

கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னேன். பிரச்சினையை என்கிட்ட சொல்லிட்ட, அதுனால அதை மறந்துடு, இன்னமும் நீ அதை நினைச்சு ஏதும் குழம்பிகிட்டு இருக்காத. நாளைக்கு உன்னைப் பாக்குறப்ப, உன்கிட்ட அதே பழைய தைரியம், தன்னம்பிக்கை இருக்கனும்னு எதிர்பாக்குறேன். இது என் ஆசை!

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் புன்னகை செய்தாள். சரி!

அடுத்தா நாள் காலை. நானே அவளை காரில் அழைத்துச் சென்றேன். சொன்ன படியே பழைய கம்பீரத்தை அடைந்திருந்தாள். நல்ல ஒரு காட்டன் சாரியில், கட்டப்பட்டிருந்த நேர்த்தியில், மரியாதையூட்டும் அலங்காரத்தில், கொஞ்சம் ஸ்டைலாகவும் அவளைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. புடவையைப் போல், ஒரு பெண்ணை செக்சியாகவும், மிகுந்த கம்பீரமாகவும் காட்டக் கூடிய உடை ஏதேனும் உண்டோ?



எங்க போறோம்?

நீயே தெரிஞ்சிக்குவ!

அவள் முறைத்தாள், நான் புன்னகைத்தேன்.

கொஞ்ச நேரப் பயணத்தில், கார் எங்களது அலுவலக ஹெட் ஆஃபிசை அடைந்தது. அவள் முகத்தில் குழப்பம் இருந்தாலும், அமைதியாக என்னுடன் வந்தாள். எனது அறையில் அவளை அமர வைத்து காத்திருக்கச் சொன்னேன்.

பின் சிறிது நேரம் கழித்து, அவளை மீண்டும் அழைத்துக் கொண்டு ஒரு கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு பெரிய குழுவே இருந்தது. அவர்களிடம் அறிவித்தேன்.

ஜெண்டில்மென், நான் சொன்ன மாதிரி, மீட் மிஸ் _______. நம்ம க்ரூப்போட புது போர்டு மெம்பர், எனக்கு அடுத்த பெரிய ஷேர்ஹோல்டர், அண்ட் மை சிஸ்டர்!

ப்ளீஸ் கிவ் அ பிக் ஹேண்ட்!

கான்ஃபரன்ஸ் அறையில் பெரிய கரகோஷம்! அவள் முகத்தில் பல உணர்ச்சிகள். யாருக்கும் தெரியாமல் என்னை முறைத்தாள். எதை வெளிக் காட்டினாலும், அது என்னை அவமானப்படுத்தும் என்பதால் அமைதியாக எல்லாருக்கும் நன்றி சொன்னாள். இருந்தாலும், தான் கம்பெனி நிர்வாகத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், நான் எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தாள். அவள் அதைச் சொன்ன போது, என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள்.

அதில் மறைமுக செய்தி இருந்தது. நீ கொடுத்தா நான், வாங்கிக்கனுமா?



சிறிது நேரம் கழித்து, என் அறையில்!

நான் உன்கிட்ட என்ன கேட்டேன், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் சொத்தா கேட்டேன்? இல்ல இதுக்கு ஆசைப்பட்டுதான் நான் வந்தேன்னு நீயா நினைச்சுகிட்டியா?

தாத்தா என்கிட்ட பணம் கொடுத்ததுக்கே, இங்கியே வேலை செய்யச் சொன்னதுக்கே ஒத்துக்காதவ இப்ப நீ சொன்னா நான் கேட்கனுமா? அவிங்க முன்னாடி சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கம்முனு இருந்தேன். என்னுடைய முடிவுகளை எடுக்க நீ யாரு? நான் உன்கிட்ட எதிர்பாக்குறது பாசம்தான், ஆனா நீ அதையும் விலை போட்டுட்டீல்ல? அவள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்! கோபத்தில் சிறிது கண் கலங்கியும் இருந்தது.

நான் அவளையேப் பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன்!

அவள் குடித்து முடித்த பின், அவள் முன் சில டாக்குமெண்ட்களையும், பாஸ்புக்கையும் நீட்டினேன். டாக்குமெண்ட், கம்பெனி ஷேர்களில் 20% அவளது பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. அவளது அக்கவுண்ட்டில், சில கோடிகள் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அவள் இன்னும் கடுப்பானாள்.

முதல்ல டாக்குமெண்ட்ல இருக்குற தேதியைப் பாரு.

பார்த்தவள் அதிர்ந்தாள். ஷேர்களை அவள் பெயருக்கு மாற்றியது, தாத்தா இறந்து ஒரு மாதத்தில் நடந்திருந்தது. அதே போல், அக்கவுண்டில் இருக்கும் பணமும், ஒரேடியாக இல்லாமல், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை என்று இரண்டு முறை போடப்பட்டு இருந்தது. நான் இன்னொரு லெட்டரையும் அவளிடம் நீட்டினேன். அது தாத்தா, எனக்கு உயிலுடன் சேர்த்து எழுதியிருந்த கடிதம்.

அதில், நான், அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அவளுக்கு தேவைப்படும் சமயத்திலோ அல்லது எப்போது கொடுத்தால் ஏற்றுக் கொள்வாளோ, அப்போது ஒப்படைக்கச் சொல்லியும் இருந்தது. அது அவரது கடைசி ஆசை என்றும் இருந்தது.

அவளுக்கு தாத்தாவின் அன்பைப் பார்த்ததும் மீண்டும் கண் கலங்கியது. பின் என்னைப் பார்த்தாள்.

நான் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தேன். ஆனா, தாத்தாவே, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு எல்லாமே சொல்லிட்டாரு. இந்தப் பணம், உன்னோட ஷேர் படி, உனக்கு வர வேண்டிய க்வாட்டர்லி ப்ராஃபிட். இன்னிக்கு இதை உனக்கு கொடுக்கனும்னு தோணுச்சு!

ஆனா, எனக்கு பணம் முக்கியமில்லைன்னு உனக்கு தெரியாதா?! இப்போதும் அவள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதில் வேகம் குறைந்திருந்தது.

நீ நல்லவ. பணம் முக்கியமில்லைன்னு நினைக்கிறவ.

ஆனா, நீ இருக்கிற உலகம் அப்படி கிடையாது. அதிலும் பணம் அதிகம் இருக்கிர இடத்துல, வக்கிரம் பிடித்த ஆட்களும் அதிகம். நீ உன்னைக் காப்பாதிக்கனும்னா, இது இருக்குறது நல்லது.

ஆக, திறமை மேல நம்பிக்கை வைக்காத, பணத்து மேல வைன்னு சொல்லுற இல்ல?

பைத்தியம் மாதிரி பேசாத? வெறும் திறமையோ, பணமோ யாரையும் காப்பாத்தாது. எல்லாமே, எப்படி உபயோகப்படுத்துரதுங்கிறதுலதான் இருக்கு. கராத்தே கத்துக்கோன்னு சொல்ற மாதிரிதான் இதுவும்! இல்லாதவங்கன்னா ஓகே. உனக்கு இருக்குங்கிறப்ப எதுக்கு இந்த பிடிவாதம்?

ஓ, காசு கேட்ட ஆளுங்க மூஞ்சில, இந்தப் பணத்தைக் காமிச்சு, என் வாழ்க்கையை காப்பாத்திக்கச் சொல்ற? அப்படித்தானே?!

அவளையே பார்த்தேன். கோபத்தில் அவள் பெருமூச்சு வாங்கினாள்!

கோபத்துல வார்த்தையை விடாத! அமைதியா இரு! அவிங்க சாதாரண மாமனார், மாமியார் மாதிரி கொஞ்சம் சீர் எதிர்பார்த்திருந்தா, நானே இதைக் கொடுக்கச் சொல்லியிருந்திருப்பேன். ஆனா, அவிங்க நடந்துகிட்ட விதம், நீ அனுபவிச்ச கொடுமையை, நான் அவ்வளவு சாதாரணமா விட்டுட மாட்டேன்! இதை சொன்ன போது என் கண்களில் தெரிந்த கோப வெறியைப் பார்த்து அவளே தடுமாறினாள்.

மெல்ல என் கையைப் பிடித்தாள், சாரி என்றாள்!

நான் மெதுவாகச் சொன்னேன், இதை யூஸ் பண்ணி உன் ஆபத்துல இருந்து தப்பிச்சிக்கோன்னு சொல்லலை. இது இருக்குறதே, எதிர்காலத்துல உனக்கு பல ஆபத்துகளை தடுக்கும்னு சொல்லுறேன். சீறுனாத்தான் பாம்புக்கு கூட மரியாதை! இல்லாட்டி, அதுக்கும், மண்புழுவுக்கும் வித்தியாசம் காமிக்க மாட்டாங்க மனுஷங்க.

தாத்தாவோட ஆசை, எனக்கும் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தது, இனி உன் கையில கொஞ்சம் பணமும், துணைக்கு நானும், நீ பொறுப்பெடுத்துக்க சில கடமைகளும் இருந்துச்சுன்னா, அதுவே உன்னை கொஞ்சம் வழிநடத்தும்.

அன்னிக்கு ஹரீஸ்க்காக அவ்ளோ ஃபீல் பண்ணி பேசுன! ஒரு வேளை நீ அன்னிக்கு சூசைட் பண்ணியிருந்தா, பொய்யான கூட்டத்துல அவரை தனியா விட்டுட்டு போயிருந்தா, அது அவருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இல்ல நீ சூசைட் பண்ணதுக்கு காரணம் அவிங்க சித்தப்பா, சித்திதான், அதை அவர்கிட்ட சொல்ல வந்தப்ப, அவர் காது கொடுத்து கேக்கலைன்னு தெரிய வந்திருந்தா குற்ற உணர்ச்சிலியே செத்துட மாட்டாரு?

அவளுக்கு, அது வரை இது தோணவில்லை என்பதை அதிர்ந்த, விரிந்த அவள் கண்கள் சொல்லியது!

அதுவும் இல்லாம…சிறிது இடைவெளி விட்டவன் சொன்னேன், என்னால, நீ தற்கொலை வரை போனதை இன்னும் ஜீரணிக்க முடியலை. ஒரு வகையில, அதுக்கு நானும்தானே காரணம்! நான் உன் மேல இன்னும் கொஞ்சம் அன்பா இருந்திருந்தா, நீ நேரடியா என்கிட்ட வந்து சொல்லியிருப்ப, இப்பிடி தற்கொலைக்கு போயிருக்க மாட்ட! இதை என் தப்புக்கான பிராயிச்சத்தம்னு எடுத்துகிட்டாலும் சரி, உனக்கு உரிமையுள்ள பங்குன்னு நினைச்சாலும் சரி, இல்ல தாத்தாவோட கடைசி ஆசைன்னாலும் சரி, நீ இதை ஒத்துகிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! ப்ளீஸ்!

அவள் என் கையைப் பிடித்தாள். டேய், ரொம்ப ஃபீல் பண்ணாத, அப்பிடில்லாம் நான் உன் மேல நம்பிக்கை இல்லாம, உடனே அந்த முடிவுக்குப் போகலை. நான் ஒரு நாள் இதுக்காக ஃபோன் பண்ணேன். நீ எடுத்தவுடனே, என்னனு கேக்காம திட்டி வெச்சுட்ட. அப்புறம் நான் வீட்டுக்கு வந்தப்பயும், உன்கிட்ட பேச முயற்சி பண்ணதுக்கு, நீதான், உனக்கு டைம் இல்லை, ஏகப்பட்ட வேலை இருக்குன்னு பேசுன… அதுலதான் கொஞ்சம் மனசு நொந்து இப்படி நடந்துகிட்டேன்! நீ ஏன் அப்படி பண்ண?

அது…. அன்னிக்குதான் உன் ஃபிரண்டு கூட சண்டை அதான்…என்று கொஞ்சம் தடுமாறினேன். ப்ச்.. அது ஏதோ மூட் அவுட். விடு. தப்புதான்! இப்ப இதை ஒத்துக்கப் போறியா இல்லையா???

அவள் என்னையே ஏதோ நம்பாமல் பார்த்தாள். பின் கேட்டாள், காசு கொடுத்துதான் அன்பை நிரூபிக்கனுமா என்ன?

சும்மா லூசு மாதிரி பேசாத? நான் நல்ல மார்க் வாங்குனப்ப உன்னால முடிஞ்ச கிஃப்ட்டை நீ கொடுக்கலை? வெறுமனே அன்பை மட்டும் காமிச்சிருக்க வேண்டியதுதானே? உன் அனிவர்சரிக்கு ஹரீஸ் கிஃப்ட் தராம இருந்திருந்தா சண்டை போட்டிருக்க மாட்ட? நீ என் மேல காட்டுரது உண்மையான பாசம்ன்னா, என்கிட்டயும் சண்டை போடனும்ல?

இப்ப சொல்றதுதான், நான் இனி பழைய மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்கிட்ட உண்மையான அன்போட இருப்பேன். திட்டுவேன், சண்டை போடுவேன், ஆனா உனக்கு ஒண்ணுன்னா, முன்ன இருப்பேன். நீயும் அப்படி இருப்பன்னா, இதை ஒத்துக்கோ!

அவள் என்னையே பார்த்தாள். பின் புன்னகை செய்தாள். பிசினஸ் மேன் இல்ல, அதான் பேச முடியாம மடக்குற?! சரி ஓகே! உனக்காக இதை நான் ஒத்துக்குறேன்.

ஆனா, நீ அவங்களை என்னப் பண்ணப் போற? இதுல ஹரீசுக்கு எந்த வருத்தமோ, சங்கடமோ வரக் கூடாது. என்கிட்டயே அவிங்களுக்காக சண்டை போடுரவர், நீ ஏதாவது பண்ணப் போயி, எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ? என்னால, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல பிரச்சினை வந்தா, அதைத் தாங்க முடியாது!

கவலைப்படாத, அப்படி ஒரு சிச்சுவேஷன் வராது! நான் அவிங்களுக்கு திட்டம் ரெடி பண்ணிட்டேன்!

அப்பிடியா? என்ன ப்ளான்?

ம்ம், பகைவனை உறவாடிக் கெடு!

Last edited by whiteburst : 27th November 2016 at 02:05 AM.

Reply With Quote
  #74  
Old 27th November 2016
MANI5050's Avatar
MANI5050 MANI5050 is offline
 
Join Date: 30th October 2015
Location: Xossip
Posts: 331
Rep Power: 5 Points: 821
MANI5050 has received several accoladesMANI5050 has received several accoladesMANI5050 has received several accoladesMANI5050 has received several accolades
Send a message via Yahoo to MANI5050
What a teriffic seen mm maas marana maas

Reply With Quote
  #75  
Old 27th November 2016
Phoenix77 Phoenix77 is offline
 
Join Date: 23rd November 2016
Posts: 31
Rep Power: 2 Points: 92
Phoenix77 is beginning to get noticed
பெரிய அப்டேட் தந்தமைக்கு நன்றி.அடுத்து வரும் பழி வாங்கும் படலத்திற்காக ஆவலுடனன் காத்திருக்கிறேன்.

Reply With Quote
  #76  
Old 27th November 2016
jaiaakash jaiaakash is offline
Custom title
 
Join Date: 17th September 2015
Posts: 21,654
Rep Power: 30 Points: 11079
jaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universe
உங்களுக்கு மிக மிக பாராட்டுக்கள் வெயிட்பர்ஸ்ட் அவர்களே . ஏன் என்றால் முதல் அப்டேட்டில் அக்கா என்று முடித்து இருந்த போது எனக்கு கொஞ்சம் பயமாகவும் வருத்தமாகவும் இருந்தது .என்னடா இது இவரும் மத்தவங்க மாதிரி இன்செட் கதையை தான் எழுத போறாரோன்னு .

ஆனால் இப்பொழுது பிளாஸ்பேக் படித்த போது தான் நிம்மதியாக இருக்கிறது .என்ன தான் அவள் மதனின் அப்பாவின் மகளாக இருந்தாலும் கூட இருவரும் ஒரு வயிற்று பிள்ளைகள் அல்ல .

கள்ள காதல் ,இன்சென்ட் இந்த சமூகத்தில் இருக்கிறதா என்பது எல்லாம் எனக்கு தெரியாது .ஆனால் இது போல சில காதல்கள் அதவாது ஆண் வேறு ஒரு பெற்றோருக்கும் பெண் ஒரு வேறு பெற்றோர்க்கும் பிறந்து இருக்க இருவரின் பெற்றோரும் திருமணம் செய்து கொள்ள இருவரும் ஒரே வீட்டில் வளரும் போது ஏற்படும் காதல் அவர்கள் என்ன தான் அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி என்று சொன்னாலும் திடிரென வந்து இருக்கும் உறவு நம் அம்மாவிற்கு பிறக்காதவன் பிறக்காதவள் ரத்தம் சம்பந்தம் இல்லாதவள் அவள் மீதோ அவன் மீதோ காதல் வந்தாலும் சமூகம் இருவரின் பெற்றோரும் திருமணம் செய்து கொண்டு உள்ளதால் இருவரையும் சகோதர சகோதரிகளாக மாற்றும் நிலைமை உள்ளது .இது கலாச்சாரம் உள்ள இந்தியாவில் மட்டும் அல்ல பலர் பலரை திருமணம் செய்யும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் கூட இப்படி தான் அந்த குழந்தைகளை ஆக்கி விடுகிறது .


ஏன் சென்ற வருடம் வட இந்தியாவில் கூட (பேர்கள் சரியாக நாபகம் இல்லை )தாயே தன் மகளை தன் கணவனுக்கு பிறந்த (முதல் மனைவியுடன் )முத்த மகனோட காதல் திருமணம் செய்ததால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஆக்கியது .

அது போல சமூகத்தில் சில சிக்கலான உறவுகளுக்கு இடையில் இருக்கும் மனநிலை சிக்கல்கள் இருப்பவற்றை நம் பழைய இயக்குனர் பாலசந்தர் போல எடுத்து கையாண்டு இருக்கிறர்கள் நீங்கள் கவனுமுடன் கதையை கொண்டு செல்ல என் வாழ்த்துக்கள் .

அதே போல் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன் எனக்கு உங்கள் முதல் கதை என்னை ஓரளவு தான் ஈர்த்தது ஏன் என்றால் ஒரு சில கதைகள் இதே போல் இருந்துள்ளன என்ன நீங்கள் அதை உணர்ச்சிபூரவமாக சொல்லி இருந்திர்கள் மற்றவர்கள் அதாவது என்னை போல ஆவெரேஜ் ரைட்டர்ஸ் உன் புருசனும் என் பொண்டாட்டியும் கள்ள காதல் வைத்து இருக்கின்றனர் அதனால் நாம் ஒன்று சேர்வோம் என்று காமமாக கொண்டு சென்று இருப்பார்கள் .

ஆனால் இந்த கதை என்னவென்றே தெரியவில்லை இது வரை வந்த கதைகளிலே மிக வித்தியாசமாக ஒரு மனசிக்கலை அருமையாக அழகாக சொல்லி உள்ளது என்னை விட்டால் இன்னும் 2 பக்கங்கள் கூட புகழ்வேன் இந்த கதையை அந்த அளவு ஈர்த்து விட்டது .

தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும் .

அதே நேரத்தில் கதையை தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்

Reply With Quote
  #77  
Old 27th November 2016
xbilla's Avatar
xbilla xbilla is offline
 
Join Date: 5th August 2013
Posts: 241
Rep Power: 11 Points: 1179
xbilla has received several accoladesxbilla has received several accoladesxbilla has received several accoladesxbilla has received several accoladesxbilla has received several accolades
அருமையான பதிவு இப்படி ஒரு அருமையான கதையை தந்ததுக்கு கதாசிரியருக்கு நன்றிகள்,
கதைக்கு படங்களை இணைக்கும் போது பெரிய படங்களின் resolutionனை சற்று குறைத்தால் வாசிக்கும் போது இலகுவாக இருக்கும்.
நன்றி...
Xbilla

Reply With Quote
  #78  
Old 27th November 2016
jaiaakash jaiaakash is offline
Custom title
 
Join Date: 17th September 2015
Posts: 21,654
Rep Power: 30 Points: 11079
jaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universe
நண்பா கேக்குறேன்னு தப்பா எடுக்க வேணாம் கதை முழுக்க அவள் அவள் என்றே வருது எந்த இடத்துலயும் ஹீரோயின் பேர் சொல்லி நான் சரியா படிக்காம விட்டுட்டேனா ப்ளீஸ் நாயகி பேர் என்ன ?

டீசர்ல வர ஹேமாவா ?

Reply With Quote
  #79  
Old 27th November 2016
jaiaakash jaiaakash is offline
Custom title
 
Join Date: 17th September 2015
Posts: 21,654
Rep Power: 30 Points: 11079
jaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universejaiaakash is one with the universe
Quote:
Originally Posted by whiteburst View Post
டீசர் - 4 (இதுவே கடைசி!)

என்னுடைய முனகல், அவனை ஊக்கப்படுத்தியது. அவனையேப் பார்த்த என் கண்கள், என் முகம் காட்ட மறுத்த அத்தனை காம உணர்வுகளையும் அவனுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தது.

திருடன், விழுங்குற மாதிரி பாத்தா நான் என்னடா பண்ணுவேன்?!

அய்யய்யோ, அவை அப்படியே மேலேறுகின்றனவே! நான் தொடைகளை இறுக்கினாலும், அதை மீறி அவன் கை முன்னேறுகிறதே. டேய் வேணாண்டா!

சொல்லப் போனால், என்னுடைய காமத்தை விட, என் மேல் இவன் கொள்ளும் காதல், காமம், என்னால் இவன் அடையும் சுகம், அவைதான் என் சந்தோஷம்! அதுதான் என்னுடைய காமத்தின் உச்சகட்டம்!

என் அழகை விட, என் அழுகை அவனை பாதிக்கிறது என்கிற பெருமிதம்! எல்லாரையும் எளிதில் வெற்றி கொள்ளும் வீரன், என் கை அசைவிற்கு தோற்கிறான் என்கிற இறுமாப்பு! அவனுடைய சீற்றங்கள் எல்லாம், ஒரு சின்னப் பார்வையில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதென்ற தலைக்கனம்! என் அழகைக் காட்டாமல், ஏன் அன்பினையும் காட்டாமல், எதையும் செய்யாமலேயே, அவனை எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் என்ற திமிர் என்னுள் ஏறியது!

அந்தத் தருணம், என்னை, நானே ஒரு மகாராணியைப் போல் உணர்ந்தேன். என்னுள் ஒரு கம்பீரம் குடியேறியது!

என்னை அறியாமல், கால் மேல் கால் போட்டு, தலை நிமிர்ந்து, ஒரு பெருமிதத்தில், புன்னகையுடன், அவன் நினைவுகளில் ஆழ்ந்தேன்!
Quote:
Originally Posted by whiteburst View Post
டீசர் - 3

எதிரியின் எல்லா தடுப்புகளையும், எந்த வித திட்டமோ, முன்னறிவிப்போ இல்லாமல் தகர்த்து முன்னேறிக் கொண்டு இருக்கும் வெற்றி வீரனைப் போலிருந்தது அவனது செயல்!

ஆனாலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது! இந்தப் போரில், நான் தோற்கவே விரும்புகிறேன்! என் தோல்வியே, எனது வெற்றி! அவன் என்னை ஆக்கிரமிப்பதை நான் ரசிக்கிறேன்! விரும்புகிறேன்! இன்னும் சொல்லப் போனால், உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறேன்!

உங்க சிஸ்டர், ஹேமா, ____ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் BSc படிக்கிறாங்கல்ல?

ஆமா, உனக்கு எப்படி அது தெரியும்?

இல்ல, நான் அவிங்களை லவ் பண்றேன்! அவிங்ககிட்ட போய் லவ்வைச் சொன்னா, எப்பிடியும் உங்ககிட்ட சொல்லாம் இல்லையா? அதான் நேரா உங்ககிட்டயே சொல்லிடலாம்னு! நீங்க வேணா உங்க சிஸ்டர்கிட்ட பேசுறீங்களா?

நான் நல்லவந்தான். ஆனா ஒரு கையாலாகதவனா இருந்துதான், நான் நல்லவன்னு ப்ரூவ் பண்ணனும்னா, நான் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்!

நான் வியர்வை மழையில் இருந்தேன். அவளோ குளித்து, முடித்து ஃப்ரெஸ்ஸாக இருந்தாள். கடினமான என் உடலும், உள்ளமும், மென்மையான அவளது உடல், உள்ளத்தின் முன் தோற்றுப் போனது!

ஏய், குளிச்சிட்டு வந்துடுறேண்டி!

இல்ல, எனக்கு இப்பிடியேத்தான் வேணும்!
Quote:
Originally Posted by whiteburst View Post
டீசர் - 2

நான் இவ்ளோ மேக்கப்போட, உங்களுக்காக காத்திட்டிருக்கேன். என்னை ஏதாச்சும் பண்ணனும்னு தோணலை, அவனுக்கு பண்றாராமா?! போடா, போய் அவன் கூடவே பேசு, போ!

வலிமையான அவன் கைகள், மென்மையான என் உடலில் செய்யப் போகும் வித்தைகளை எதிர்பார்த்தது! மெல்ல மெல்ல, அவன் என்னை சூறையாடப் போவதை எண்ணி என் மனம் சிலிர்த்தது! இது வரை அவன் காட்டிய வேகமும், ஆவேசமுமே, என்னை அவன் மேல் மோகத்தை ஏற்படுத்தியிருக்க, இன்னமும் அவன் காட்டப் போகும் ஆவேசத்தை எண்ணி என் மனம் சற்றே படபடப்பு அடைந்தது! அத்தனை ஆவேசத்திலும், வேகத்திலும், அவன் என் மேல் காட்டிய அக்கறை என்னை கொஞ்சம் வெறி கொள்ளவும் வைத்தது! அந்த வெறி, இன்னும் அவன் என்னை, சின்னா பின்னமாக்க வேண்டும் என்று எதிர் பார்த்தது!

வேட்டைக்குச் செல்லும் சிங்கம் நாக்கை நீட்டி, சப்புக் கொட்டுவதில் அர்த்தம் இருக்கிறது! இரையாகப் போகும், புள்ளி மானுமா, சப்பு கொட்டும்?

ஆனால், காமத்தில் எதுவும் நடக்கும்!

வேட்டையாடுபவனும், வேட்டையாடப்படுபவளும், சேர்ந்தே அந்த வேட்டையை சப்புக் கொட்டி ரசித்தனர்!
Quote:
Originally Posted by whiteburst View Post
டீசர் வெளியீடு - 1

ஒரு சில கணவன், மனைவிகள் இது போன்றதொரு சூழ்நிலையைச் சந்திருப்பார்கள்! ஓரளவேனும் குற்ற உணர்ச்சி உள்ள, நல்ல தன்மை கொண்ட, ஆணையோ, பெண்ணையோ, அவர்கள் அறியாமல் செய்து வருந்தும் ஒரு பெருந்தவறுக்காக, அவர்கள் வருந்தும் சமயத்தில், வழங்கப்படும் மன்னிப்பும், ஆறுதலும், அவர்கள் மனதிற்குள் தங்களது துணைக்கு ஒரு தனி உயர்ந்த இடத்தைக் கொடுத்து விடும்!

அது முதல், அவர்கள், தங்கள் துணை சொல்வதை தட்ட மாட்டார்கள். அவர்களது முதன்மை நோக்கம், தனது துணையின் மகிழ்ச்சியாக மாறிவிடும்! அப்படி ஒரு தருணத்தில், மிகச் சரியாக செயல்படும், ஆணும், பெண்ணும், மிகுந்த புத்திசாலிகள்!

சுய மரியாதை பேசி, நல்ல வாழ்க்கையை இழப்பதுதான் புத்திசாலித்தனம் என்றால், விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அடையும் முட்டாளாகவே இருந்து விட்டுப் போகிறேன்!
டீசர்களை திரும்ப திரும்ப படித்து விட்டேன் இது எல்லாம் வரும் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் உண்மையில் உங்கள் போன கதையை விட பல மடங்கு சிறப்பாக அமைத்து உள்ளீர்கள் திரும்ப திரும்ப படித்து கொண்டு இருக்கிறேன்

Reply With Quote
  #80  
Old 27th November 2016
lotoffun768 lotoffun768 is offline
 
Join Date: 5th June 2014
Posts: 466
Rep Power: 9 Points: 1142
lotoffun768 has received several accoladeslotoffun768 has received several accoladeslotoffun768 has received several accoladeslotoffun768 has received several accoladeslotoffun768 has received several accolades
அருமையான பதிவு நண்பா
சும்மா அசத்துறீங்க இயல்பான அக்கா தம்பியின் உரையாடல் அருமை
தம்பி அக்காவின் மீது உள்ள பாசத்தை அவளுக்கு உணர்த்தி விட்டான்
இனி அக்காவுக்காக என வெல்லாம் செய்ய போகிறான் சீக்கிரம் சொல்லுங்க நண்பா
______________________________
kumar...
lotoffun768...

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 01:00 PM.
Page generated in 0.02277 seconds